முகப்பு பராமரிப்பு

பராமரிப்புப் பிரிவு

தொல்பொருளியல் திணைக்களத்திற்குச் சொந்தமான ஏனைய பிரிவுகள் மூலமாக இடையீடு செய்து தொல்பொருளியில் நினைவுத்தூபிகளையும் தடை செய்யப்பட்ட காணிகளையும் பாதுகாத்துப் பராமரித்தும் வருகின்ற பிரதான பிரிவு பராமரிப்புப் பிரிவாகும்.

மேற்படி நோக்கங்களை ஈடேற்றிக்கொள்ளம் பொருட்டு கீழே குறிப்பிடப்பட்ட பணிகளை ஈடேற்றுதல் இப்பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றது.

 • மனித மற்றும் தாபன வளங்களின் மேம்பாடு.
 • தொல்பொருளியல்சார் தடைசெய்யப்பட்ட காணிகளுக்கு எல்லைகளை விதித்து பாதுகாத்துப் பேணிவருதல்.
 • ஆண்டுக்குள் தெரிவு செய்யப்பட்ட ஆரம்ப பாதுகாத்தலுக்கு இலக்காகிய பாதுகாக்கப்பட்ட நினைவுத் தூபிகளைப் புனரமைத்தல், உறுதி செய்தல், பராமரித்தல் மற்றும் பூங்கா மட்டத்தில் பேணி வருதல்.
 • தொல்பொருளியல் இடங்களுக்கு அவசியமான பெயர்ப்பலகைகளை இடல், திணைக்கள ஊழியர்கள் மற்றும் உல்லாசப் பயணிகளுக்கு அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல்.
 • திணைக்களதிற்குச் சொந்தமான புதிய கட்டங்களை பராமரித்துப் பேணிவரல்.
 • ஆட்களுக்கு சொந்தமான பாதுகாக்கப்பட்ட நினைவுத்தூபிகளுக்கான அத்தியாவசி யமான பராமரிப்புப் பணிகளை ஈடேற்றுதல்.
 • தெரிவு செய்யப்பட்ட தொல்பொருளியல் இடங்களுக்கான வர்த்தக அனுமதிப் பத்திரங்களை விநியோகித்தல்.
 • கடந்தகால பராமரிப்புச் செயற்பாடுகள் பற்றிய அறிக்கைகளைத் தயாரித்தல்.

பிரிவின் அடிப்படைக் கட்டமைப்பு

இதற்கிணங்க இயங்கி வருகின்ற பராமரிப்புப் பிரிவு பிராந்திய பன்முகப்படுத்தலின் கீழ் பராமரிப்பு வலய கோட்பாட்டினை அமுலாக்கி வருகின்றது. அதாவது கீழேயுள்ள வரைபட மாக்கலின் பிரகாரம் பிரதேச செயலகப் பிரிவு மட்டத்தில் சகலவிதமான தொல் பொருளியல் பராமரிப்பு வலயப் பணிகள் அமுலாக்கப்படும். அத்துடன் தேசிய தொல்பொருளியல் கொள்கைகளுக்கிணங்க அந்நோக்கங்களை ஈடேற்றிக் கொள்கையில் வடக்கு வட்டம் மற்றும் தெற்கு வட்டம் எனும் வகையில் பிரதிப் பணிப்பாளர்கள் இருவரின் கீழ் பராமரிப்புப் பிரிவு இயங்கி வருகின்றது.

பிரதேச செயலகப் பிரிவுமட்டத்தில் பராமரிப்பு வலயங்களைப் பிரித்தொதுக்குதல்

வட மாகாணம் - 04 வலயங்கள்
வட மத்திய மாகாணம் - 09 வலயங்கள்
கிழக்கு மாகாணம் - 06 வலயங்கள்
வடமேல் மாகாணம் - 08 வலயங்கள்
மத்திய மாகாணம் - 06 வலயங்கள்
மேல் மாகாணம் - 04 வலயங்கள்
சபரகமுவ மாகாணம் - 06 வலயங்கள்
ஊவா மாகாணம் - 06 வலயங்கள்
தென் மாகாணம் - 06 வலயங்கள்

பராமரிப்புப் பிரிவின் செயற்பாடுகள்

01. திணைக்களக் கட்டடங்களைத் திருத்தி அமைத்தல்.

 

 • தலைமையகம்
 • பிராந்திய அலுவலகங்கள்


அம்பாறை பிராந்திய அலுவலகம்
02.
தொல்பொருளியல் இடங்களுக்கு சிறிய கருவிகளையும் உபகரணங்களையும் வழங்குதல் வருடாந்தம் கிடைக்கின்ற நிதியேற்பாடுகளை மாகாண அலுவலகங்களுக்கு பகிர்ந்தளித்து அதனூடாக
வேலைத்தளங்களுக்கு அவசியமான உபகரணங்கள் பெற்றுக்கொள்ளப்படும்.
03. தொல்பொருளியல் உல்லாச பங்களாக்கள் (வெளிக்கள மனைகளையும், நூதன சாலைகளையும் திருத்தியமைத்தல்)
 • 07 உல்லாச பங்களாக்கள்.
 • 14 நூதனசாலைகள்.
 • மிஹிந்தலை நூதனசாலை.

மிஹிந்தலை நூதனசாலை
04. தொல்பொருளியல் ஒதுக்கங்களில் வீதிகளையும் ஒழுங்குகளையம் தயாரித்தல்.
 • சரளைக்கல் போடப்பட்ட வீதிகளை அமைத்தலும் வருடாந்த பராமரிப்பும்.
 • பூங்காவினுள்ளே ஒழுங்கைகளை அமைத்தலும் வருடாந்த பராமரிப்பும்.
 • படிக்கட்டு வரிசைகளையும் கற்பரம்பலையும் உறுதிப்படுத்துதல்.
ஹத்திகுச்சிய ஒழுங்கை ரிட்டிகல கல் பரம்பல்
05. பாதுகாக்கப்பட்ட நினைவுத்தூபிகளின் கூரையைப் பராமரித்தல்
கட்டடக்கலை பேணலுக்கு இலக்காகிய நினைவுத்தூபிக் கூரைகளை 10 வருடங்களுக்கு கிட்டிய காலப்பகுதியில் மீண்டும் பராமரிக்க வேண்டியுள்ளது. (இலக்கு வருடத்திற்கு 20 இடங்கள்)

கட்டுபொத்த கல்ஹேன விஹாரை
06. உதவிச்சுவர்களை நிர்மாணித்தலும் நினைவுத்தூபிச் சுவர்களை உறுதி செய்தலும்.
கட்டடக்கலை பாதுகாத்தல் மூலமாக உறுதிசெய்யப்பட்ட சுவர்ப்பகுதிகள் இயற்கை மற்றும் காணிச் செயற்பாடுகள் மூலமாக அழிவடையக்கூடும். அத்த கைய சுவர்களை இரண்டாந் தடவையாக உறுதிசெய்தலும் நிலைக் கூம்பினை வலுவூட்டுதலும்.
பண்டுவஸ்நுவர தொல்பொருள் நிலையத்தின் உறுதிசெய்யப்பட்ட சுவர் குளுமீமாகட தொல்பொருளியல் நிலையம்
07. தொல்பொருளியல் நிலைய பூங்கா அலங்கரிப்பு திணைக்கள ஊழியர்கள் மற்றும் உல்லாசப் பயணிகளுக்கு வசதிகளை வழங்குதல்.
 • தொல்பொருளியல் நிலையத்திற்கான முன்னேற்றத் திட்டத்தை தயாரித்தல்.
 • அதற்கிணங்க ஒழுங்கைகள், மலசலகூட வசதிகள், வாகனத் தரிப்பிடம், மின்சாரம், நீர் வழங்கும் இடங்களை திட்டமிடலும் நிர்மாணித்தலும்.
 • வேலைத்தள அலுவலக ஊழியர் வீடுகளைத் திருத்தியமைத்தல்.
 • மரநடுகையும் இயற்கைத்தாவரங்களைப் பாதுகாத்தலும்.
மிஹிந்தலை களுதிய பொக்குன கொக்எம்பே ஆசனகரய
08. பெயர்ப்பலகைளைத் தயாரித்தல்.
உல்லாசப் பயணிகளுக்கு இடங்களைக் காட்டுவதற்காகவும் விழிப்பூட்டுவதற் காகவும் அவசியமான கீழே குறிப்பிடப்பட்ட பெயர்ப்பலகைகள் தொல்பொருளியல் திணைக்கள வேலைத்தளங்களுக்காக பாவிக்கப்படுகின்றன.
 • வீதி சமிக்ஞை பலகைகள்.
 • இடத்துக்குரிய அறிமுகப் பலகைகள்.
 • நினைவுத்தூபி அறிமுகப் பலகைகள்.
 • எச்சரிக்கைகள், சட்டநியமங்கள் மற்றும் சட்டம் தொடர்பான பலகைகள்.
 • கற்சாசனங்களின் மொழிபெயர்ப்புப் பலகைகள்.
வீதி சமிஞ்ஞை பலகைகள் எச்சரிக்கையுடனான பலகைகள்
Identification boards at monuments கற்சாசனங்களின் மொழிபெயர்ப்பு பலகைகள
09. எல்லைக் கற்களை நாட்டுதலும் வேலிகளை அமைத்தலும்.
 • ஒதுக்கங்களை நிலஅளவை செய்து பிரித்த பின்னர் தொல்பொருளியல் ஒதுக்க எல்லைகளைக் குறித்தல்.
 • சிறிய தொல்பொருளியல் இடங்கள், அகழ்வு இடங்கள் போன்ற விசேட நிலையங்களுக்கான கேற் மற்றும் வேலிகளை அமைத்து நிலப்பகுதியைப் பாதுகாத்தல்.
10. தொல்பொருளியல் இடங்களுக்கு புதிதாக உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல்.
 • வேலைத்தள அலுவலகங்கள், களஞ்சியங்கள் மற்றும் வதிவிடங்களை புதிதாக நிர்மாணித்தல்.
 • நீர். மின்சாரம், தொலைபேசி மற்றும் மலசலகூட வசதிகளைப் புதிதாக வழங்கல்.
 • சுவீகரிக்கப்படுகின்ற காணிகளுக்காக குடியமர்ந்துள்ளளோரை அகற்றும் போது அவர்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்பாடு செய்தல்.
பராமரிப்புப் பிரிவின் கீழ் தற்போது பேணிவரப்படுகின்ற இடங்களும் நினைவுத் தூபிகளும் கீழே காட்டப்பட்டவாறு அமையும்,
நூதனசாலைகள் 14
வெளிக்கள குடிமனைகள் 08
உல்லாசத்துறை பங்களா 07
நூல் விற்பனை நிலையங்கள் 15
மாகாண இரசாயன ஆய்வுகூடங்கள் 03
வேலைத்தளங்கள் 2488
நினைவுத்தூபிகள் 7056
திங்கட்கிழமை, 28 நவம்பர் 2011 08:21 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது