தொலை நோக்கு

பெருந்தோட்டக் கைத்தொழில் அபிவிருத்தியின் ஊடாக தேசிய சுபீட்சத்தை அடைதல்.

எமது செயற்பணி

பொருளாதார ரீதியாக, சமூக ரீதியாக, சூழல் ரீதியாக ஸ்தாபிக்கப்பட்ட பெருந்தோட்டத்துறை ஊடாக பெருந்தோட்டக் கைத்தொழில்துறையின் நிலைபேறான தன்மை, இலாபகரத்தன்மை மற்றும் உற்பத்தித் திறன் என்பவற்றை மேம்படுத்துதல்.

அமைச்சின் பிரதான எதிர்பார்ப்பு

 • பெருந்தோட்டத்துறையின் பயிர்ச்செய்யப்பட்ட நிலங்களில் உற்பத்தித்திறனை மேம்படுத்துதல்.
 • வருடாந்த தேயிலை மற்றும் இரப்பர் மீள்நடுகை வீதத்தை அதிகரித்தல்.
 • பாரம்பரியமற்ற பிரதேசங்களில் புதிய நடுகையை மேம்படுத்துதல்.
 • ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களையும் மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டங்களையும் அமுலாக்குதல்.
 • பண்டங்கள் சேவைகளுக்கு பெறுமதி சேர்த்தல் மற்றும் வணிகப் பெயரை மேம்படுத்துதல்.
 • காணிகளின் நிலைபேறான பயன்பாட்டின் ஊடாக இயற்கை முறைமையைப் பேணிப்பாதுகாத்தல்.

அமைச்சின் மூலோபாய அபிவிருத்தி நோக்கம்

 • அந்நிய செலாவணி வருமானத்தை அதிகரித்தல்.
 • உற்பத்திச் செலவை குறைந்த மட்டத்தில் தக்கவைத்துக்கொள்ளுதல்.
 • பெருந்தோட்டக் கம்பனிகளினதும் சிறு தேயிலை தோட்ட சொந்தக்காரர்களினதும் இலாபத்தை அதிகரித்தல்.
 • பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல்.
 • நுகர்வோருக்கு உயர்ந்த தரத்திலான உற்பத்திகளை விநியோகித்தல்.
 • சூழல் பாதுகாப்பின் ஊடாக நிலைபேறான அபிவிருத்தியை மேற்கொள்ளுதல்.

அமைச்சின் செயலாற்றுகை சுட்டிகள்

அமைச்சின் மத்திய கால அபிவிருத்தியை அடைவதற்கு ஆறு செயலாற்றுகை சுட்டிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

 • தேயிலை மற்றும் இரப்பரிலிருந்து ஈட்டும் அந்நிய செலாவணித் தொகை.
 • உற்பத்தித்திறன் (காணி அலகின் பிரகாரம் விளைச்சலை அதிகரித்தல்)
 • தேயிலை மற்றும் இரப்பர் மீள்நடுகை வீதம்.
 • புதிய நடுகையின் கீழ் விரிவாக்குதல்.
 • பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளின் தொகையும் பெறுமதியும்.
 • விற்பனை செலவுக்கு எதிராக குறைந்த உற்பத்திச் செலவு.
FaLang translation system by Faboba